fbpx

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் தனி பாதுகாப்பு சட்டம் போட வேண்டும்…! தமிழக அரசுக்கு கோரிக்கை

தனியார் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கான பாதுகாப்பு சட்டம் போல் விதிகளை உருவாக்கிட வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்தவர் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் 17-ம் தேதி பள்ளிக்குள் சில சமூக விரோத கும்பல் அத்துமீறி நுழைந்து, காவல் துறை வாகனங்களை தீ வைத்து கொளுத்தியும் பள்ளியின் உடைமைகளை கட்டடம் தவிர மற்ற அனைத்து உடைமைகளையும் கடுமையாக சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். பின்னர் தனியார் பள்ளி சங்கத்தின் சார்பில் பள்ளிகளை மூடப்பாவதாக அறிவித்தனர். நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவித்தனர்.

இது குறித்து மீண்டும் அனைத்து சங்க நிர்வாகிகள் சென்னையில் ஒன்றுகூடி பள்ளிகளுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர், பள்ளிக்கல்வி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில் வருங்காலத்தில் எந்த கல்வி நிறுவனத்திலும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு விதிகளை உருவாக்கி பள்ளிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் மீது மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வெளியிடப்பட்ட அரசாணை எண் 3 /2008-ன்படி தனியார் சுயநிதி பள்ளிகளுக்கும் அரசாணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Also Read: இன்று முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை மழைக்காலக் கூட்டத் தொடர்…! மொத்தம் 18 அமர்வு… 32 சட்ட முன்மொழிவுகள் எடுக்கப்படும்…!

Vignesh

Next Post

"செம வாய்ப்பு" தமிழக அரசு சார்பில் சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட பிரத்யேக விழிப்புணர்வு முகாம் நடைபெறும்...! ஆட்சியர் அறிவிப்பு

Tue Jul 19 , 2022
சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட பிரத்யேக விழிப்புணர்வு முகாம் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சிறுபான்மையினர்‌ பொருளாதார மேம்பாட்டுக்கழகம்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ கடன்‌ திட்டங்களான தனிநபர்‌ கடன்‌, சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில்‌ கடன்‌, கைவினை கலைஞர்களுக்கு கடன்‌, கல்வி கடன்‌ திட்டம்‌ ஆகிய திட்டங்கள்‌ செயல்படுத்தப்படுகிறது. திட்டம்‌ […]

You May Like