fbpx

இந்த தீவை வாங்கினால் சாபம் சேரும் – காரணம் என்ன தெரியுமா?

இத்தாலியில் தென்மேற்கு பகுதியில் உள்ள நேப்பிள்ஸ் வளைகுடாவில் இருக்கும் கயோலா தீவை யார் வாங்கினாலும் அவர்கள் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வதாக வரலாறு கூறுகிறது. அப்படி என்னதான் இருக்கிறது அந்த தீவில், இது எதனால் என்பதை விரிவாக பார்க்கலாம்.

கயோலா தீவு: இத்தாலி நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் இந்த தீவிற்கு பின்னால் பல மர்மமான விஷயங்கள் உள்ளது. இந்த தீவை எல்லாருமே சபிக்கப்பட்ட தீவு என அழைக்கிறார்கள்.இந்த தீவை யாரெல்லாம் சொந்தமாக வாங்கினார்களோ அவர்கள் எல்லாரும் தீரா கஷ்டத்தில் விழுந்ததாக வரலாற்றில் கூறப்படுகின்றது. முதன்முதலில் லூகி நெக்ரி என்பவர் 1800-ன் பின்பகுதியில் இந்த தீவை சொந்தமாக வாங்கி, அங்கு ஒரு மாளிகையும் கட்டியுள்ளார்.

ஆனால் இந்த தீவை வாங்கிய சில காலத்திலேயே தனது சொத்துகள் அனைத்தையும் இழந்து நடுத்தெருவிற்கு வந்துள்ளார். இதன் பின்னர் இந்த தீவை கேஸ்பேர் ஆல்பெங்கே என்ற கப்பல் மாலுமி வாங்கினார்.இவர் சில நாட்களில் கப்பல் விபத்தொன்றி்ல் இறந்தார். இதன் பின்னர் சில வருடங்கள் கழித்து மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்றின் தலைவர் மவுரிஸ் சாண்டாஸ் இந்த தீவை வாங்கினார்.செல்வச் செழிப்பில் வாழ்ந்த இவர் 1958 ம் ஆண்டு மனநல மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்டார்.

இதன் பின்னர் இந்த தீவை அமெரிக்க தொழிலதிபர் பவுல் கெட்டி வாங்கினார்.அடுத்த சில மாதங்களில் அவரது 12 வயது இளைய மகன் மூளை கட்டி வந்து இறந்து போனான். அவரது மூத்த மகனும் தற்கொலை செய்து கொண்டான்.இதற்கிடையில் அவரது இரண்டாவது மனைவி போதைப்பொருள் உண்டு இறந்தார். இந்த தீவை சொத்தமாக்குபவர்களுக்கு இந்த தீவின் துரதிஸ்டம் விடாமல் துரத்தியது. ஆனால் இதற்கான உண்மை காரணம் இதுவரை தெரிய வரவில்லை.

Read More: ரிலீஸ் தேதியுடன் வெளியான கல்கி 2898 AD போஸ்டர்.. மிரட்டும் பிரபாஸ்!

Rupa

Next Post

தினசரி சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? நிபுணர் சொல்வது என்ன?

Sun Apr 28 , 2024
பொதுவாக சாக்லேட் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது மற்றும் அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. ஜேசன் விஷ்னெஃப்ஸ்கே என்பவர் சாக்லேட் சாப்பிட்டால் உடலில் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை விளக்குகிறார்.  சாக்லேட்கள், குறிப்பாக டார்க் சாக்லேட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளால் ஏற்படும் சேதத்திலிருந்து நமது செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் சாக்லேட் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை உடலில் […]

You May Like