fbpx

அடகு கடையில் துளையிட்டு அலாரத்தை ஆஃப் செய்தபோது சிக்கிக் கொண்ட கொள்ளையர்கள்..! நோட்டமிட்ட கும்பலை ஓடவிட்ட மக்கள்..!

அடகு கடையில் துளையிட்டு அலாரத்தை செயழிலக்க செய்தபோது பொதுமக்களிடம் கொள்ளையர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் தஞ்சையில் அரங்கேறியுள்ளது.

தஞ்சை அருகே மருங்குளம் கடைவீதியில் கவுசல்யா என்ற பெயரில் நகை அடகு கடை உள்ளது. இதனை கொல்லாங்கரையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். நேற்றிரவு கடையை பூட்டிவிட்டு ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்றுள்ளார். நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர்கள், அடகு கடையின் அருகில் இருந்த மருந்தக கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் மருந்தக கடைக்குள் இருந்து அடகு கடையின் பக்கவாட்டு சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்தனர். இதையடுத்து கடைக்குள் இருந்த அலாரத்தை செயலிழக்க செய்வதற்காக அதன் வயரை துண்டிக்க முயற்சித்தபோது அலாரம் அடித்துள்ளது.

உடனே சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனைப் பார்த்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை பொதுமக்கள் சிலர் விரட்டி பிடிக்க முயன்றனர். அப்போது சாலையில் கிடந்த கற்களை பொதுமக்கள் மீது வீசி விட்டு தப்பி தலைமறைவாகி விட்டனர். இந்த தாக்குதலில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகை, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அடகு கடையில் உடனடியாக அலாரம் ஒலித்து பொதுமக்கள் திரண்டதால் ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போகாமல் தப்பின. மேலும், அடகு கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Chella

Next Post

யாரும்மா நீ..! 43 சவரன் நகையை குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற பெண்..! ஏடிஎம் மையத்தில் பரபரப்பு

Tue Jul 5 , 2022
குன்றத்தூர் அருகே பெண் ஒருவர் 43 சவரன் நகையை ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்துவரும் கோதண்டம் என்பவர் நேற்று காலை ஏடிஎம் மையத்திற்குள் சென்று பார்த்த போது, அங்கிருந்த குப்பை தொட்டியில் கைபை […]
#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

You May Like