fbpx

”மே மாதம் முழுவதுமே வெப்ப அலை தொடரும்”..!! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

மே மாதத்திலும் வெப்ப அலை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்தாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதம் முழுவதும் வெப்ப அலை வீசியது. இந்நிலையில், மே மாதம் முழுவதும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யுஞ்ஜெய் மஹோபத்ரா அளித்த பேட்டியில், ”நாட்டின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் தொடர்ச்சியாக வெப்ப அலை வீசியது. இதன் தாக்கம் காரணமாக, சில மாநிலங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தன. மக்களுக்கு உடல் நலன் சார்ந்த எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.

கடந்தாண்டு இல்லாத அளவில் மிக மோசமான வெப்ப அலை வீசிய மாதமாக ஏப்ரல் மாதம் இருந்ததோடு, இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை பதிவான ஆண்டாகவும் 2024 உருவெடுத்துள்ளது. இதே நிலை மே மாதத்திலும் தொடர வாய்ப்புள்ளது. குறிப்பாக தெற்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப்பிரதேசம், விதர்பா, மரத்வாடா, குஜராத் மாநிலப் பகுதிகளில் 8 முதல் 11 நாள்கள் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் எஞ்சிய பகுதிகள், கிழக்கு மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கரின் சில பகுதிகள், ஒடிஸா மாநில உள் மாவட்டங்கள், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார், கர்நாடக மாநில வட உள்மாவட்டங்கள், தெலங்கானா ஆகிய மாநிலப் பகுதிகளில் 5 முதல் 7 நாள்கள் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது.

மே மாதத்தில் வழக்கமான (91 முதல் 109 சதவீத மழைப் பொழிவு) மழைப் பொழிவுக்கான வாய்ப்பும் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடமேற்கு மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள், மத்திய மாநிலங்களின் சில பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களில் வழக்கமானது முதல் வழக்கத்தைவிட சற்று கூடுதலான மழைப் பொழிவுக்கு வாய்ப்பு இருக்கிறது. நாட்டின் மற்ற பகுதிகளில் இயல்பைவிட குறைவான மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

Read More : கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டவர்களுக்கு நிவாரணம்..!! உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!

Chella

Next Post

’இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க’..!! ’வாட்ஸ் அப்பில் Chat செய்ய முடியாது’..!! மாஸ் அப்டேட் வருகிறது..!!

Thu May 2 , 2024
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் நிறுவனமும் அவ்வப்போது பல்வேறு புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட உள்ளது. அதன்படி, இந்த புதிய கட்டுப்பாட்டு அம்சம் சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் காணப்பட்டது. இந்த புதிய அம்சம் எதிர்கால புதுப்பிப்பில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்ட […]

You May Like