தமிழகத்தின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ.,வான வேலாயுதம் காலமானார். இவர் 1996-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து பா.ஜ.க எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர்.
1996-ல் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் வேலாயுதம் வெற்றி பெற்றபோது, தமிழக சட்டமன்றத்தில் அக்கட்சி சார்பில் முதல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வேலாயுதம் 1963ல் ஆர்எஸ்எஸ்ஸில் சேர்ந்தபோது அவருக்கு வயது 13. 1982ல் மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து, இந்து முன்னணியில் இருந்து, 1989ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். வேலாயுதம் 1989ல் 14,404 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
1991ல் தோல்வியடைந்தாலும் 19,653 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். 1996 இல், மண்டைக்காடு கலவரத்தால் ஏற்பட்ட பிளவு காரணமாக அவரும் அவரது குழுவினரும் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க கடுமையாக பாடுபட்டனர். பின்னர் 1996-ல் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் வேலாயுதம் வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்தில் அக்கட்சி சார்பில் முதல் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.