fbpx

10ஆம் வகுப்பில் தோல்வி..!! மண்ணெண்ணெய் குடித்து மாணவி தற்கொலை..!! திருவள்ளூரில் சோகம்..!!

தமிழ்நாட்டில் 2023 – 24ஆம் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ஆம் தேதி (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதத் தகுதி பெற்றிருந்தனர். இதற்கிடையே, தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையை சேர்ந்த குமாரி என்ற மாணவி, 10ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததால், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் குடித்து மயங்கி விழுந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read More : மேலும் ஒரு அதிர்ச்சி..!! சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!! தொழிலாளர்களின் நிலை..?

Chella

Next Post

இன்று முதல் 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை!! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

Sat May 11 , 2024
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த மக்களை சற்று நிம்மதி பெருமூச்சி விடவைத்துள்ளது. மழை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் […]

You May Like