fbpx

கோர விபத்தில் மணமகன் உட்பட 6 பேர் பலி!… திருமண ஷாப்பிங்கிற்காக சென்றபோது நிகழ்ந்த சோகம்!

Accident: ஆந்திராவில் திருமணத்திற்கு ஷாப்பிங் சென்றபோது நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி மணமகன் உட்பட பேர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பெரோஸ் பாஷா(30). இவருக்கு சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், திருமணத்திற்காக தனது குடும்பத்தினர் 7 பேருடன் காரில் ஹைதராபாத்துக்கு ஷாப்பிங் சென்றுள்ளார். இதையடுத்து, வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பாச்சுபள்ளி அருகே எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து எதிர் சாலையில் சென்று ​​எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மணமகன் பெரோஸ் பாஷா, குழந்தைகள், 2 பெண்கள்,2 ஆண்கள் என 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாநிலத்தின் பல்நாடு மாவட்டத்தில் பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் குறைந்தது 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சிலக்கலூரிப்பேட்டை மண்டலத்தில் இந்த விபத்து நடந்ததாகவும், விபத்தில் இரு வாகனங்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: திடீர் வெள்ளப்பெருக்கு!…முற்றிலும் அழிந்த மாகாணம்! குழந்தைகள் உட்பட 50 பேர் பலி!…

Kokila

Next Post

ஷாக்!… கருவுறாமை சிகிச்சை!… இதய நோய் அபாயத்தை இரட்டிப்பாக்கும்!

Sun May 19 , 2024
Infertility Treatment: பிரசவத்திற்குப் பிறகு, கருவுறாமை சிகிச்சையைப் பெற்ற நபர்கள், இயற்கையான முறையில் கருத்தரித்தவர்களைக் காட்டிலும் இரு மடங்கு இதய நோய் பாதிப்புக்குள்ளானதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 31 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவமனை பதிவுகளை ஆய்வு செய்த ரட்ஜர்ஸ் ஹெல்த் நிபுணர்களின் ஆய்வின்படி,கருவுறாமை சிகிச்சையைப் பெற்றவர்கள் உயர் இரத்த அழுத்தத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 2.16 மடங்கு அதிகம், இது உதவியின்றி கருத்தரித்தவர்களைக் காட்டிலும் ஆபத்தான உயர் இரத்த […]

You May Like