fbpx

TRB முக்கிய தகவல்: மொத்தம் 1,060 காலி பணி இடங்கள்…! நேர்காணல் கிடையாது என தேர்வு வாரியம் அறிவிப்பு…!

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு நேர்காணல் கிடையாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 2017-2018-ம் ஆண்டிற்கான அரசு பல்டெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மேலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் கல்வித்தகுதி சான்றிதழ், பணி அனுபவம் சான்றிதழ் தொடர்பான கூடுதல் ஆவணங்களை 2022 மார்ச் 11-ம்  தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

பாலிடெக்னிக் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் அடிப்படையில் விவரஙகள சரிபார்க்கப்பட்டு, 15 பாடப் பிரிவுகளுக்கு ஒரு பணியிடத்திற்கு 2 பேர் என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.தற்பொழுது முதல் கட்டமாக Textile Technology, Production Engineering, உள்ளிட்ட பாடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள, வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஜூலை 16-ம் தேதி நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.மற்ற பாடங்களுக்கு 17,18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

மேலும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான கடிதங்களை 14-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பணித் தேர்விற்கு நேர்காணல் எதுவும் கிடையாது.இந்தப் பணிக்கு போட்டி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் , கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவச் சான்றின் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. நேர்முகத் தேர்வுகள் எதுவும் கிடையாது. மேலும் விண்ணப்பித்தவர்கள் வேறு விதமான தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Also Read: இதை செய்ய தவறினால் ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 அளவிற்கு மின் கட்டணம் கூடுதலாக செலுத்த நேரிடும்…!

Vignesh

Next Post

ரேஷன் கார்டு இருந்தால் போதும்.... நீங்க இலவச கேஸ் சிலிண்டர் பெறலாம்...! எப்படி பெறுவது தெரியுமா...? முழு விவரம் உள்ளே...

Thu Jul 14 , 2022
ரேஷன் அட்டை வைத்திற்கும் நபர்களுக்கு தற்போது ஒரு வருடத்தில் 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கும் வாய்ப்பை உத்தரகண்ட் மாநில பெற்றுள்ளனர். அரசின் இந்த முடிவால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். அதன் பலனை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பதை பார்க்கலாம். நீங்கள் அந்தியோதயா திட்ட பயனாளியாக இருந்தால், உங்களுக்கு அரசால் இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். இது குறித்து உத்தரகண்ட் மாநில முதலவர் புஷ்கர் சிங் தாமி அரசு […]

You May Like