உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முரத்நகர், கங்கா நகர் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் பெண்கள், ஆண்கள் உடை மாற்றும் அறை தனித்தனியாக உள்ளது. இந்நிலையில், பெண்கள் உடை மாற்றும் அறையில் சமீபத்தில் சிசிடிவி கேமரா கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மகத் முகேஷ் என்பவரின் செல்போனில் சிசிடிவி கேமரா நேரலைக்கான செயலி இருந்தது கண்டறியப்பட்டது. அவரின் செல்போனை சோதனை செய்தபோது பல பெண்கள் உடை மாற்றும் வீடியோ சிக்கியது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் மகத் முகேஷ்-க்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.