fbpx

மாணவர்கள் கன்பியூஸ் ஆக வேண்டாம்!! பழைய பஸ் பாஸ் இருந்தாலே போதும்!!

பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பழைய பஸ் பாஸ் வைத்தே பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள் ஜுன் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவ-மாணவிகள் பழைய பஸ் பாஸ் காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் முன்கூட்டியே தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில்,
வெயில் மற்றும் மக்களவை தேர்தல் முடிவு (ஜுன் 4ம் தேதி வெளியாகிறது) ஆகியவற்றை கருத்தில் கொண்டு கோடை விடுமுறைக்கு பிறகு 2வது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

தற்போது வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால், ஜுன் 6ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஜூன் 6ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்க சாத்தியமில்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் பழைய பஸ் பாஸ், பள்ளி அடையாள அட்டை அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் கூறியுள்ளது. தமிழகத்தில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பதை தொடர்ந்து மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்டுத்திக்கொள்ள போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.

Read More: மக்களே…! பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் மே 31-ம் தேதி வரை கெடு…!

Rupa

Next Post

அட இனி இவ்வளவு ஈசியா..? வாகன ஓட்டிகளே இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Wed May 29 , 2024
While there have been changes in the rules for obtaining a driving license, an action notification has also been released for motorists.

You May Like