fbpx

‘விவேகானந்தர் பாறையில் மோடி தியானம்’ 45 மணி நேர தியானத்துக்கு இடையே சாப்பாடே கிடையாதாம்!!

பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், 3 நாட்களும் அவர் இளநீர், திராட்சை உள்ளிட்ட பழங்களின் ஜூஸ் போன்ற நீர் ஆகாரங்களை மட்டுமே பருக இருக்கிறார்.

மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 132 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி 45 மணி நேரத்துக்கு தியானம் மேற்கொள்கிறார்.

இதற்காக, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று மாலை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 5.08 மணிக்கு வந்தார். மாலை 5.40 மணி அளவில் பகவதி அம்மனை தரிசித்த பிறகு, படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்றடைந்த பிரதமர் மோடி, அங்கு தியானத்தை தொடங்கினார்.

நாளை (1-ம் தேதி) மாலை 4 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், படகு மூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி திரும்புகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடலில் உள்ள விவேகானந்தர் பாறையின் 3 கி.மீ. சுற்றளவுக்கு படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், 3 நாட்களும் அவர் இளநீர், திராட்சை உள்ளிட்ட பழங்களின் ஜூஸ் போன்ற நீர் ஆகாரங்களை மட்டுமே பருக இருக்கிறார். நேற்று மாலையும், இன்றும் இளநீர் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை பருகி உள்ளார் பிரதமர் மோடி.

Read more ; ‘நீரிழப்புக்கு WHO-அங்கீகரிக்கப்பட்ட ORS ஐ குடிக்கவும்..!’ வீட்டில் தயாரிக்கப்பட்ட கலவை தீங்கு விளைவிக்கும் : மருத்துவர்கள் எச்சரிக்கை!

Next Post

மாணவர்களுக்கு குட் நியூஸ்: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம்..!

Fri May 31 , 2024
தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. TN School Open: தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்தல் காரணமாக மற்ற வகுப்புகளுக்கும் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் 10 , 11 மற்றும் 12ஆம் […]

You May Like