fbpx

பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்கள் கவனத்திற்கு!! துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு – ரீசெண்ட் அப்டேட்!

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 துணைத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது.  சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே – 6ம் தேதி வெளியானது.  இதில் ஒட்டுமொத்தமாக 94.56% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.  இதில், 5.44% மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வி தேர்வுத் துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.  தற்பொழுது, துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூலை 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான விரிவான விளக்கம் பின்வருமாறு…

பிளஸ் 2 துணைத்தேர்வு அட்டவணை :

ஜூன் 24 – மொழிப்பாடம், ஜூன் 25- ஆங்கிலம், ஜூன் 26- ஜூன் 27- வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், ஜூன் 27- கணினி அறிவியல், புள்ளிவிவரங்கள், உயிர் வேதியியல், ஜூன் 28- இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், ஜூன் 29 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஜூலை-1 கணிதம், விலங்கியல், வர்த்தகம் , வர்த்தகம், மைக்ரோ உயிரியல் தேர்வுகள் நடைபெற உள்ளன.

பிளஸ் 1 துணைத்தேர்வு அட்டவணை :

ஜூலை 2- மொழிப்பாடம், ஜூலை 3 ஆங்கிலம், ஜூலை 4- இயற்பியல், பொருளாதாரம், ஜூலை 5- கணினி, ஜூலை 6- தாவரவியல், வரலாறு, ஜூலை 8- கணிதம், வணிகவியல் ஜூலை 9- வேதியியல், கணக்கியல் தேர்வுகள் நடைபெற உள்ளன.

Read more ; “அவரால் தான் இன்று நான் இப்படி இருக்கிறேன்” நடிகை ஸ்ருதிஹாசன் எமோஷனல் போஸ்ட்!

English Summary

english summary

Next Post

தேர்தல் கருத்துக்கணிப்பு எதிரொலி : 3.5% உயர்ந்த சென்செக்ஸ்.. 23 ஆயிரத்தை கடந்த நிஃப்டி.. வரலாற்று உச்சம்!

Mon Jun 3 , 2024
English summary

You May Like