fbpx

வாவ்…! பட்டா மாறுதல் உள்ளிட்ட விவரம்… இலவசமாக ஆன்லைன் மூலம் பார்க்கலாம்…!

“தமிழ்நிலம்” செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் பயன்பெறலாம்.

தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை மூலம் www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. அதில் பட்டா மாறுதல் -“தமிழ்நிலம்” கைப்பேசி செயலி இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டாமாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை Tamil Nilam Citizen portal http://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரிவரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ் நிலம் (ஊரகம்) மற்றும் தமிழ் நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டுவர ஏதுவாக உருவாக்கபட்டு இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பட்டா / சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நில விவரம், புலப்படம், நகரநில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும் எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவை (www.eservices.tn.gov.in) இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப் பட்டியல்கள் விவரங்கள் (Correlation Statement) போன்றவை பதிவிறக்கம் செய்யவழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள், வட்டங்கள். கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விவரங்கள். இத்துறையின் முக்கிய அரசாணைகள். சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்கள் போன்றவை அறியலாம்.

English Summary

“Tamil Nilam” information related to land size through Tamilnilam app.

Vignesh

Next Post

டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தால் உடனடி அபராதம்...!

Sun Jun 16 , 2024
Penalty for traveling in reserved coach without ticket

You May Like