fbpx

‘ஒரே நபர் தொடர்ச்சியாக ஏலத்தில் தேர்வு’..!! ’டாஸ்மாக் மது இறக்குமதி செய்ததில் ஊழல்’..!! உண்மையை போட்டுடைத்த சிஏஜி அறிக்கை..!!

டாஸ்மாக் மது இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட 2021-2022ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான அறிக்கை குறித்து சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக முதன்மை தலைமை கணக்காயர் ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், ”ஒரே நபர் தொடர்ச்சியாக ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டதால், மதுபான இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளது. டாஸ்மாக் மதுபான விலை உயர்த்தப்பட்டாலும் அதற்கேற்ற வரி அரசுக்கு செலுத்தப்படவில்லை.

அரசுக்கு வரி செலுத்தாததால் ரூ.30.50 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு ரூ.5.78 கோடி கோவிட் பண உதவி செய்யப்பட்டுள்ளது. இதில் 27,943 தகுதி இல்லாதவர்களுக்கு கோவிட் பண உதவி கிடைத்திருக்கிறது என்று சிஏஜி அறிக்கையில் தகவல் வெளியாகியிருக்கிறது. வரித் தாக்கல் செய்யாதவர்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Read More : ’விபச்சாரத் தொழிலில் நல்ல பணம்’..!! ஓய்வு பெற்ற நீதிபதியின் மகனுக்கு டிவி தொகுப்பாளினியை இறையாக்க முயன்ற பூசாரி..!!

English Summary

The CAG has issued a report alleging corruption in the importation of Tasmac liquor.

Chella

Next Post

குட் நியூஸ்...! 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூலை 15-ம் தேதி வரை நேரடி சேர்க்கை...!

Sun Jun 30 , 2024
Direct admission till 15th July for 8th and 10th passed students.

You May Like