fbpx

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் கொடைக்கானல், ஊட்டி!

Kodaikanal: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களையும் மாநகராட்சியாக தரம் உயர்த்தி, உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று நகராட்சி நிர்வாக செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களில், அங்கு வசிப்போர் எண்ணிக்கை குறைவு. அதேநேரம், சுற்றுலா பயணியர் வரத்து அதிகமாக இருக்கிறது. அவர்களின் வசதிக்காக உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது அவசியம். நிர்வாக ரீதியாக தரம் உயர்த்தும் பட்சத்தில், சுற்றுலா தலங்களின் கட்டமைப்பை மேம்படுத்த முடியும்.

பழைய விதிப்படி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதில் சிக்கல் இருந்தது. தற்போது, மாநகராட்சியை தரம் உயர்த்துவதில், மக்கள் தொகை, ஆண்டு வருமானத்துக்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அதற்கான மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தால், சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகியவை தரம் உயர்த்தப்படும். அதேபோல், ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களையும் மாநகராட்சியாக தரம் உயர்த்தி, உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

Readmore: ஹத்ராஸ் பலி: ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர் இரங்கல்!

English Summary

Kodaikanal, Ooty will be upgraded as a corporation!

Kokila

Next Post

வரலட்சுமியின் வாழ்க்கைக்கு ஆபத்து..!! கணவர் இவ்வளவு மோசமானவரா..? அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..!!

Thu Jul 4 , 2024
Nikolai could even be dangerous. He might have cheated on his first wife and tortured her. And may be in contact with many women.

You May Like