fbpx

நீட் தேர்வு சோதனை..!! மாணவிகளின் தாலியை கூட விட்டு வைக்கல..!! உயர்நீதிமன்ற கிளை கடும் கண்டனம்..!!

நீட் முறைகேடு குற்றவாளிகளுக்கு ஆதரவான அதிகாரிகளின் வீடுகளில் ஏன் சோதனை செய்யவில்லை என்றும், அப்படி சோதனை நடத்த ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்றும் உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி தருண் மோகன் என்ற அதிகாரி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற கிளை இந்த கேள்வியை எழுப்பி உள்ளது. மேலும், இந்த நிலை தொடர்ந்தால் முறைகேடு அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.

வருகின்ற திங்கள்கிழமை இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்வதாக மத்திய அரசு கூறியதை அடுத்து, இந்த வழக்கினை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழகத்தில் திருமணமான மாணவிகளின் தாலியை கூட கழற்ற சொல்லி சோதனை செய்தீர்கள் என்று கேள்வி கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்தியாவிலேயே இல்லாத ஒரு மாணவனுக்காக மூன்று மாநிலங்களில் 3 பேர் தேர்வு எழுதப்பட்டுள்ளதையும் சுட்டி காட்டினார்.

மேலும், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் ஆவணங்களை தேசிய தேர்வு முகமை தரவில்லை. குற்றவாளிகளுக்கு உடந்தையாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புவதாக சென்னை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Read More : அமீபா மூளைக்காய்ச்சல்..!! தடுப்பது எப்படி..? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

English Summary

The High Court branch has questioned why the houses of the officials supporting NEET malpractices were not raided and why such raids should not be ordered.

Chella

Next Post

வரும் 12-ம் தேதி காலை 10.30 மணி முதல்...! கூட்டுறவுச் சங்க பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு...!

Wed Jul 10 , 2024
From 10.30 am on the 12th...! Important Notice for Co-operative Societies Employees

You May Like