fbpx

தமிழகமே எதிர்பார்த்த விக்கிரவாண்டி வாக்கு எண்ணிக்கை… இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் …!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அத் தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் பிரச்சாரம் ஜூலை 8-ம் தேதி நிறைவுற்ற நிலையில், ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

82.48 சதவீத வாக்கு பதிவானது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 572 வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்டவை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து சீல்வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் போது அங்கு 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை காலை 8 மணியளவில் வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. மொத்தம் 20 சுற்றுகளாக எண்ணப்பட்டு நாளை மதியத்துக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary

Counting of Vikravandi votes will begin at 8 am today

Vignesh

Next Post

உணவுடன் கண்டுபிடிக்கப்பட்ட 5000 ஆண்டுகள் பழமையான ஃபிரிட்ஜ்..!! எங்கு தெரியுமா?

Sat Jul 13 , 2024
A 5000-year-old fridge used by the people of Iraq and the remnants of food stored in it have been discovered in recent research

You May Like