fbpx

Pm Modi | 100 மில்லியன் ஃபாலோயர்ஸ்..!! உலகின் நம்பர் ஒன் தலைவரானார் பிரதமர் மோடி!! எக்ஸ் தளத்தில் புதிய சாதனை..

எக்ஸ் தளத்தில் 100 மில்லியன் அதாவது, 10 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்ஸை பெற்று பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள நரேந்திர மோடி, “இந்த துடிப்பான ஊடகத்தில் இருப்பதில் மகிழ்ச்சி. இதன் மூலம் கிடைத்துள்ள விவாதங்கள், கருத்துகள், மக்களின் ஆசீர்வாதம், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் பலவற்றைப் போற்றுகிறேன். எதிர்காலத்திலும் இதே ஈடுபாட்டுடன் இருப்பதை எதிர்நோக்குகிறேன்” என்று கூறியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் அதிகம் பின் தொடரப்படும் உலக தலைவர் என்ற சாதனையையும் பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் (38.1 மில்லியன்), துபாய் அரசர் ஷேக் முகமது (11.2 மில்லியன்) மற்றும் போப் பிரான்சிஸ் (18.5 மில்லியன்) போன்ற உலகத் தலைவர்களை விட மோடி அதிக ஃபாலோயர்களைப் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்தியாவில் மற்ற இந்திய அரசியல்வாதிகளை விட மோடிக்கு அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை 26.4 மில்லியன் பேரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 27.5 மில்லியன் பேரும் பின்தொடர்கிறார்கள்.

அரசியல்வாதிகள் மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (64.1 மில்லியன்), பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் (63.6 மில்லியன்), அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (52.9 மில்லியன்) உள்ளிட்ட உலக விளையாட்டு பிரபலங்களை விட மோடியை பின்தொடர்பவர்கள் அதிகம்.

Read more | மருந்தாகும் குழந்தையின் தொப்புள் கொடி..!! அடேங்கப்பா, இதுல இத்தனை மருத்துவ நன்மைகளா?

English Summary

PM Modi reaches 100 million followers on X, becomes the most followed world leader

Next Post

TEENZ -க்கு நல்ல வரவேற்பு கிடைக்கலன்னா சினிமாவ விட்டு விலகி.. கண்காணா இடத்திற்கு போயிருப்பேன்..!! -  பார்த்திபன் உருக்கம்

Sun Jul 14 , 2024
Director Parthiban has posted on X page to thank the fans for their support for Teens.

You May Like