fbpx

Vedio Viral | 3-வது குழந்தைக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்!! என்ன பெயர் தெரியுமா?

மூன்றாவது குழந்தையை சிவகார்த்திகேயன் வரவேற்கவுள்ளார் என்ற தகவல் வைரலாக பகிரப்பட்டு வந்த நிலையில் குழந்தையின் பெயரை எக்ஸ் தளத்தில் விடியோ மூலம் அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் தற்போதைய வசூல் நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், ‘மெரினா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார். தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வரும் முன்னரே ஆர்த்தி என்ற தனது மாமா மகளை திருமணம் செய்திருந்தார். பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுற்றி அடித்தபோதிலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை தனது குடும்பத்துடன் அழகாக நடத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தத் தம்பதிக்கு ஆராதனா என்கிற மகளும் குகன் என்கிற மகனும் உள்ளனர்.

மனைவி, மகள் ஆராதனா, மகன் குகன் தாஸுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் சிவகார்த்திகேயன் பகிர்வதுண்டு. அந்த புகைப்படங்களை அடிக்கடி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி தங்களது மூன்றாவது குழந்தையை வரவேற்கவுள்ளனர் என்ற தகவல் வைரலாக பகிரப்பட்டு வந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது மூன்றாவது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டியுள்ளதாக பதிவிட்டுள்ளார். தற்போது குழந்தையின் பெயர் வைக்கும் நிகழ்வில் விடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, மூன்றாவது குழந்தையின் பெயர் பவன் சிவகார்த்திகேயன் எனத் தெரிவித்துள்ளார்.

English Summary

Sivakarthikeyan has announced the name of the child through a video on X site while the information that Sivakarthikeyan is going to welcome the third child has been shared virally

Next Post

2000 சதுரடியில் வீடு கட்ட நினைக்கிறிங்களா... பொருட்கள் மற்றும் செலவு குறித்து பார்க்கலாம்..

Mon Jul 15 , 2024
2000 sq ft house plan - things and selavu

You May Like