Bigg Boss OTT 3: விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் OTT 3-ல் இந்தியாவின் பணக்கார யூடியூப் பிரபலங்களில் ஒருவரான அர்மான் மாலிக் தனது 2வது மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகர் அனில் கபூர் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின் 3வது சீசன் சர்ச்சைகளோடு செமயாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பணக்கார யூடியூப் பிரபலங்களில் ஒருவரான அர்மான் மாலிக் தன் இரண்டு மனைவிகளுடன் கலந்து கொண்டிருக்கிறார். இரண்டு மனைவியுடன் ஒரே வீட்டிலா என பார்வையாளர்கள் வியந்து பார்க்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் ஓடிடி 3 வீட்டில் இருக்கும் அர்மான் மாலிக் தன் 2வது மனைவி கிருத்திகா மாலிக்குடன் உடலுறவில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த வீடியோ வைரலாகி, நெட்டிசன்களிடையே பெரும் விவாதபொருளாக மாறியுள்ளது. சிறுகுழந்தைகளும் குடும்பத்துடன் இந்த வீடியோவை பார்க்கிறார்கள். எனவே, இதுபோன்ற காட்சிகளை வெளியிடும் பிக்பாஸை தடை செய்யவேண்டும் என்று பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். முதல் மனைவி பாயலின் பெஸ்ட்டியான க்ரித்திகாவை தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் அர்மான். இதையடுத்து கோபம் அடைந்த பாயல் அவரை பிரிந்து சென்றார். அதன் பிறகு மனம் மாறி அர்மான் மாலிக்குடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: அச்சுறுத்தும் டெங்கு!. விரைவில் குணமாக இந்த மாதிரியான உணவை சாப்பிடுங்கள்!