“2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் சாணக்கியதனத்தை பார்க்கப்போகிறீர்கள்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 40 தொகுதிகளில் வெற்றி பெற செய்த மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை பரிசாக அளித்துள்ளார். காலையில் வாக்கிங் செல்வதற்கே பயமாக இருக்கிறது. ஏப்பா நீங்க எல்லாம் வாக்கிங் போகாதீங்க பா. வாக்கிங் போனீங்கன்னா இடைத்தேர்தல் வந்துரும். அதுலயும் திராவிட மாடல் ஜெயிச்சிட்டோம்னு சொல்லுவாங்க. அடிக்கடி அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை. ரவுடிசம் அதிகரித்துவிட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் டாக்டர் சரவணனை வானளாவ புகழ்ந்து பேசி வாக்கு கேட்டோம். ஆனால், மக்கள் சட்டமன்றத்திற்கு ஒரு பார்வை, நாடாளுமன்றத்திற்கு ஒரு பார்வை என வாக்குகளை செலுத்தியுள்ளனர். யானைக்கும் அடி சறுக்கும். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தலைமையே தோல்வியை சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் களம் வேறு. இந்த முடிவுகள் இறுதி அல்ல. காலம் மாறும். அதிமுக மீண்டும் அரியணை ஏறும். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் சாணக்கியதனத்தை பார்க்கப்போகிறீர்கள்” என்றார். சசிகலா சுற்றுப்பயணம், அதிமுக பிளவுகள், ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு, “Wait and see” என பதிலளித்தார்.
Read More : ரூ.70 லட்சம் வருமானம் தரும் செல்வ மகள் சேமிப்பு திட்டம்..!! எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா..?