புதிய உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சலுகை வரி வீதம் கூட்டுறவு சங்கங்களுக்கு வருமான வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ஒத்துழைப்பு மூலம் செழிப்பு’ என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் வகையில், கூட்டுறவு சங்கங்களுக்கு நிவாரணம் வழங்க, அரசு பின்வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது, இதில் பல்வேறு நடவடிக்கைகளுக்கான வரிக் குறைப்பு மற்றும் அவர்கள் பணம் எடுப்பதற்கான டிடிஎஸ் வரம்பை அதிகரித்தல் ஆகியவை அடங்கும்.
கூட்டுறவு சங்கங்கள் மீதான கூடுதல் கட்டணம் குறைப்பு; ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மீதான சர்சார்ஜ் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அதன் உறுப்பினர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும், இவர்கள் பெரும்பாலும் கிராமப்புற மற்றும் விவசாய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கூட்டுறவுகளுக்கு மாற்று குறைந்தபட்ச வரி குறைப்பு; கூட்டுறவு சங்கங்கள் 18.5 சதவீத மாற்றுக் குறைந்தபட்ச வரி செலுத்த வேண்டும். இருப்பினும், நிறுவனங்கள் 15% என்ற விகிதத்தில் அதை செலுத்தலாம். கூட்டுறவு சங்கங்களுக்கும், நிறுவனங்களுக்கும் இடையே சம வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில், கூட்டுறவு சங்கங்களுக்கான வட்டி விகிதம் 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.