fbpx

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!! இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை..!!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

அதன்படி கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும் 8, 9ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! வருகிறது முக்கிய அறிவிப்பு..?

English Summary

Chennai Meteorological Department has issued yellow alert for 9 districts in Tamil Nadu today.

Chella

Next Post

நகங்களின் அடிப்பகுதியில் நிலவு போன்ற வடிவம் இருப்பது ஏன்? இதற்கு என்ன அர்த்தம்?

Wed Aug 7 , 2024
Why is the bottom of the nails shaped like a moon? What does this mean?

You May Like