fbpx

SSC முக்கிய அறிவிப்பு…! மொழிபெயர்ப்பாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம்

இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர், முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு, 2024″-க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் அன்று வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளுக்கான குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பு அலுவலர், இளநிலை மொழிபெயர்ப்பாளர், முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், முதுநிலை மொழிபெயர்ப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்குக் கணினி அடிப்படையிலான திறந்த நிலை போட்டித் தேர்வை பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தவுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

பதவி விவரம், வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை தேர்வாணைய இணையதளம் ssc.gov.in மூலம் மட்டுமே ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 25.08.2024, ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 26.08.2024 ஆகும்.

தென் மண்டலத்தில், ஆந்திராவில் 03, தமிழகத்தில் 03, தெலங்கானாவில் 01 என 07 மையங்கள் மற்றும் நகரங்களில் கணினி அடிப்படையிலான தேர்வு அக்டோபர் அல்லது நவம்பர் 2024-ல் நடைபெறும்.

English Summary

SSC Important Notification…! Apply for Interpreter exam

Vignesh

Next Post

திடீரென தள்ளிவைப்பு..!! எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் புதிய தேதியை அறிவித்த இஸ்ரோ..!!

Wed Aug 14 , 2024
It has been announced that the SSLV T-3 rocket carrying the EOS-08 Earth observation satellite will be launched from Sriharikota on the 16th.

You May Like