fbpx

மிகப்பெரிய அபாயம்..!! எல்லாம் அழிய போகுது..!! அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வெச்சிக்கோங்க..!! மக்களுக்கு எச்சரிக்கை..!!

ஜப்பானில் ரிங் ஆஃப் பியர் என்ற பகுதி உள்ளது. உலகில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்களில் இந்த பகுதியும் ஒன்று. உலகின் 90% நிலநடுக்கங்கள் இங்குதான் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. அங்கிருக்கும் ஹியுகனாடா கடலில் சமீபத்தில் தான் 7.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஒரு மெகா நிலநடுக்கம் அங்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 30 ஆண்டுகளில் 8-9 ரிக்டர் அளவில் மெகா நிலநடுக்கம் ஏற்பட 70-80% வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்டால், 100 அடி உயரத்தில் சுனாமி ஏற்பட்டு கரையோரப் பகுதிகள் முற்றாக அழியும் அபாயம் உள்ளது. பொதுவாக சுனாமி ஏற்பட்டால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் செல்ல நேரமில்லை. ஆனால், இந்த மெகா சுனாமி தாக்கும் போது மக்கள் வெளியேற சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுனாமி வெறும் 2 நிமிடங்களில் ஜப்பானின் ஷிசுவோகாவை தாக்கி அழிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 3 நிமிடங்களில் ஹகயாமாவையும், ஐந்து நிமிடத்தில் ஜப்பானின் கொச்சியையும் அழிக்கும். ஜப்பான் அரசாங்கம் 29 மாகாணங்களில் உள்ள 707 நகராட்சிகளை அதிக ஆபத்துள்ள நகரங்களாக அறிவித்துள்ளது. இந்த நகரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மெகா நிலநடுக்கத்தால், குறைந்தது 2.31 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், 207.8 டிரில்லியன் யென் பொருளாதார சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய அரசாங்கம் பல்வேறு காரணிகளை ஆராய்ந்து, மக்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்து எச்சரிக்கைகளை வெளியிடும். அதன்படி, தற்போது மக்களுக்கு “மெகா த்ரஸ்ட் பூகம்ப எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு அத்தியாவசியப் பொருட்களுடன் தயாராக இருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த வாரத்திற்குள் மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Read More : மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! வெறும் ரூ.210 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 வருமானம் பெறலாம்..!! இணைவது எப்படி..?

English Summary

The mega-earthquake is expected to cause at least 2.31 lakh deaths and 207.8 trillion yen in economic damage.

Chella

Next Post

அண்ணா, பெரியார் பிறந்த நாள்...! பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5,000 பரிசுத் தொகை...!

Fri Aug 16 , 2024
Anna, it's Periyar's birthday...! Prize money of Rs.5,000 for school & college students

You May Like