fbpx

விஜய்யின் மாஸ்டர் பிளான்..!! தியேட்டர்களில் பறக்கப்போகுது கட்சி கொடி..? வெளியான பரபரப்பு தகவல்..!!

நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார். கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்னரே கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையே, தவெக கொடியில் உள்ள நிறங்கள் மற்றும் வாகை மலர் இடம்பெறுவது குறித்து விஜய் தரப்பில் ஆலோசனைகள் நடைபெற்று வந்தது. நேற்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி பறக்கவிடப்பட்டது. அந்த கொடியில் மஞ்சள் நிறத்தில் விஜயின் முகத்துடன் கட்சி கொடி காட்சியளிக்கிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 22ஆம் தேதி கட்சிக் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என தகவல் வெளியானது. விஜய் ஏற்றவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே, அடுத்த மாதம் ‘தி கோட்’ திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் கட்சி கொடியேற்றி கொண்டாட விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். தியேட்டருக்கு வரும் சுமார் ஐம்பது லட்சம் மக்களிடம் கட்சி கொடியை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே விஜயின் மாஸ்டர் பிளான் என சொல்லப்படுகிறது.

Read More : அரசியல் தலைவர்களின் போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்..!! தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை..!!

English Summary

Vijay fans are planning to celebrate the release of ‘The Code’ next month by hoisting the party flag in theatres.

Chella

Next Post

ஆண்ட்ரியாவை கர்ப்பமாக்கிய அரசியல்வாதி? ஆனா.. அபார்ஷன் பண்ணிட்டாங்க..!! - பரபரப்பை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்..!!

Tue Aug 20 , 2024
Most people who use social media know Bailwan Ranganathan. Actors in the film industry are getting more views by talking about their private matters and controversial matters about actresses

You May Like