பிரபல நிறுவனத்தில் ஐடி பிரிவில் அசோசியேட் இன்ஜினியர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட இருக்கின்றனர்.
ஃப்ளக்ஸ் (Flex), அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் முழுப்பெயர் ஃப்ளக்ஸ்ரானிக்ஸ் (Flextronics). இந்த நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்பான உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில், ஃப்ளக்ஸ் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி, ஃப்ளக்ஸ் நிறுவனத்தில் அசோசியேட் இன்ஜினியர், ஐடி (Associate Engineer – IT) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு டிகிரி முடித்து ஐடி பிரிவில் 0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். எச்ஆர் சாப்ட்வேரில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். மேலும், ஜாவா (Java), ஜே2இஇ (J2EE), Xpath, XSLT பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறமை மற்றும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி, மாத சம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் Flex நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஃப்ளக்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு நியமிக்கப்படுவார்கள். பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கலாம்.
Read More : செப்.23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு..!! எங்கு தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!