காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீபத்தில் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அவர் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நாட்டின் பிற பகுதிகளிலும் காங்கிரஸ் தனது அதிகாரத்தை நிலை நாட்டும் என தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த பேச்சு தேசிய அளவில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் ஆக்கிரமிப்பு மனநிலை அதிகம்.. தேசிய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பைப் பலிகொடுத்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கம் கொண்டது. அபகரிப்பு மனப்பான்மை அதிகம். காங்கிரஸ் கட்சியின் வரலாறு முழுவதும் அதிகார குணம் மட்டும் தான் உள்ளது.. ஏதாவது செய்து ஆட்சியை பிடிக்க வேண்டும். அதிகாரத்தில் நீடிக்க வேண்டும், எந்த எல்லைக்கும் சென்று அதிகாரத்தை தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. தற்போது காங்கிரஸ் தலைவர் கார்கேவின் பேச்சு அதனை வெளிக்காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்.
காங்கிரஸ் அதிகார எண்ணத்திற்கு எடுத்துக்காட்டு ;
காங்கிரசின் இந்த மனநிலைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு உள்ளது. இந்தியாவில் 1975 ல் நெருக்கடி நிலை இருந்தது. அப்போது காங்கிரஸ் அரசால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்திய ஜனநாயகத்தை நசுக்கி, அரசியலமைப்பை மதிக்காமல், நீதிமன்றத்தை மதிக்காமல் காங்கிரஸ் நடந்து கொண்ட விதம் இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்களாக மாறின. காங்கிரஸ் கட்சி வரலாற்று ரீதியாக பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் சமூகங்கள் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயன்றது, பெரும்பாலும் பிளவுபடுத்தும் கொள்கைகள் மூலம் முரண்பாடுகளையும் அமைதியின்மையையும் விதைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ விதிகள் விதிக்கப்பட்டிருந்தது இதற்கு மற்றொரு உதாரணம் ஆகும். ஜம்மு காஷ்மீரை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்து வந்தது. இந்தியாவின் ஒரு பகுதி என்று ஜம்மு காஷ்மீரை பார்க்காமல்.. தங்கள் “அதிகாரத்தின்” ஒரு பகுதியாக காங்கிரஸ் காஷ்மீரை பார்த்தது.
WAQF போர்டு-பாணி செயல் முறை
கார்கேவின் கருத்துக்கள் இந்தியாவில் உள்ள WAQF வாரியத்தின் செயல்பாடுகளுக்கு இணையான ஒரு வினோதமான கருத்துகளையும் ஈர்த்தன. முஸ்லிம் மத மற்றும் தொண்டு நிறுவனங்களை நிர்வகிக்கும் சட்டப்பூர்வ அமைப்பான WAQF வாரியம், மத அதிகாரம் என்ற போர்வையில் நில அபகரிப்பில் ஈடுபடுவதாக அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் நலனுக்காக பெரும் நிலங்களையும் சொத்துக்களையும் கையகப்படுத்துவதை உள்ளடக்கிய இந்த நடைமுறை, அதன் வாக்கு வங்கிகளின் நலன்களுக்காக வளங்களையும் அதிகாரத்தையும் கைப்பற்றும் காங்கிரஸ் கட்சியின் பரந்த உத்தியை பிரதிபலிக்கிறது.
WAQF வாரியத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமையால் விமர்சிக்கப்படுவதைப் போலவே, காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் அணுகுமுறையும் வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் தேர்தல் வெற்றிகளைப் பாதுகாக்க குறிப்பிட்ட சமூகங்களின் நலன்களுக்குச் சேவை செய்வதில் முக்கியத்துவம் அளிப்பது போன்றவற்றால் விமர்சிக்கப்படுகிறது.
370 & 35A சட்டப்பிரிவை மீட்டெடுக்க காங்கிரஸின் முயற்சி
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நாட்டின் பிற பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரத்தை நிலைநாட்டும், என்று கார்கே தெரிவித்துள்ளார். இதனால் எங்கே 370 & 35A சட்டப்பிரிவை மீட்டெடுக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2019 இல் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்ட இந்தக் சட்டங்கள், நீண்ட காலமாக இந்திய அரசியலில் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்தது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் தனித்துவத்தை பாதுகாப்பதாக கூறி இந்த விதிகளை காங்கிரஸ் அடிக்கடி பாதுகாத்து வந்தாலும், அவற்றின் உண்மையான தாக்கம் பிரிவினைவாதத்தை ஆதரிப்பதே ஆகும். மேலும் அங்கே தீவிரவாதத்தை வளர்த்தெடுக்கவும் இந்த சட்டங்கள் உதவும். இதைத்தான் பிரதமர் மோடி அரசு நீக்கியது.. ஆனால் இதை மீண்டும் கொண்டு வரும் திட்டங்களில் காங்கிரஸ் உள்ளது.
இந்த சட்டம் மீண்டும் வந்தால், ஜம்மு காஷ்மீர் மீண்டும் பழைய பாதுகாப்பற்ற நிலைக்கு செல்லும். தேசிய பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். பிரிவினை அரசியலை ஏற்படுத்தும், பிரிவினைவாத சக்திகளுக்கு வழி ஏற்படுத்தும், 10 வருடங்களாக அங்கே நடந்த முன்னேற்றங்கள் பின்னோக்கி செல்லும். இப்படிப்பட்ட அதிர்ச்சி அளிக்கும் சட்டத்தைதான் மீண்டும் கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் சொல்லாமல் சொல்லிக்கொண்டு உள்ளது.
கேள்வி குறியாகும் தேசிய பாதுகாப்பு?
இந்திய தேசிய பாதுகாப்பில் காங்கிரஸ் அத்தனை சிறப்பாக செயலப்பட்டது இல்லை என்பதே நிபுணர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் கருத்து. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கங்களின் கீழ் ஜம்மு காஷ்மீர் என்பது தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு புகலிடமாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்த பகுதி தீவிரவாதத்தின் எழுச்சியைக் கண்டது. பிரிவினைவாத கொள்கைகளை கொண்ட தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததும் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
எனவே, கார்கேவின் கருத்துக்கள், ஜம்மு காஷ்மீரில் தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல; அரசியல் ஆதாயத்திற்காக தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்ய காங்கிரஸ் தயாராக இருப்பதை அவை நினைவூட்டுகின்றன. சட்டப்பிரிவு 370 மற்றும் 35A மீதான விவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆதாயங்களுக்காக பிராந்தியத்தில் கடினமாக வென்ற அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பணயம் வைத்து நெருப்புடன் விளையாடுகிறது.
Read more ; இரண்டு மூத்த IAS அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு..!! TN Govt அதிரடி உத்தரவு