fbpx

அனுமதி இல்லாமல் கட்டிய கட்டடம்… 6 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு…! வீட்டு வசதி துறை உத்தரவு…!

திட்டமில்லா பகுதிகளில் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைபடுத்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.08.2024 முதல் 31.01.2025 வரை 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையினால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் (HACA) அமையும் பட்சத்தில் அரசு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். மேலும், இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Unauthorized educational institution building… 6 months extension of time

Vignesh

Next Post

மாஸ் அறிவிப்பு...! சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.6,000 உதவித்தொகை...!

Tue Sep 3 , 2024
Rs.6,000 monthly stipend for top athletes

You May Like