fbpx

இப்படியும் ஒரு அரசா… இஸ்லாமியர்கள் வேறு மதத்தினருடன் பழக கூடாது..!! அத்துமீறும் தாலிபான்களின் ஆதிக்கம்..!!

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கம், 2021ல் அதிகாரத்திற்குத் திரும்பியதில் இருந்து, பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக பெண்களின் சுதந்திரமும், பெண் மீதான அடக்குமுறையும்தான் அதிகரிக்கத் தொடங்கியது. பெண்கள் கல்வி கற்கும் உரிமையில் தொடங்கி, உடை உடுத்துவது என தற்போது பேச்சுரிமையில் வந்து நிற்கிறது. இந்நிலையில் தலிபானின் புதிய சட்டம் இஸ்லாமியர்களின் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது.

முன்னதாக,  பெண்கள் பொது இடத்தில் இருக்கும்போது தங்கள் உடலை முழுவதுமாக மறைக்க வேண்டும், குறிப்பாக முகத்தை மறைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்களின் ஆடைகள் மெல்லியதாகவோ, இறுக்கமாகவோ, குட்டையாகவோ இருக்கக் கூடாது, ஆண் பாதுகாவலர் இல்லாமல் வெளியே பயணிக்கக்கூடாது, முகக் கவசம் அணிவது கட்டாயம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய சட்டம் மொத்தம் 35 வகையான அம்சங்களை கொண்டுள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இஸ்லாமியர் அல்லாதவர்களும் நட்பாக பழகக்கூடாது. அதேபோல் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்பட யாருடனும் நட்பு பாராட்டவும், உதவி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; பரபரப்பு.. மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை..!! 6 பேர் சுட்டுக் கொலை..

English Summary

Do not make friends with non-Muslims. A law brought by the ruling Taliban in Afghanistan that prohibits them from being given any aid has sparked controversy.

Next Post

பகீர்.. தங்கச்சிய காதலித்த அண்ணன்.. வேண்டாம்னு சொல்லியும் கேக்கல..!! கடைசில ஒரு உசுரு போச்சு..

Sat Sep 7 , 2024
Girlfriend's father was arrested for slashing a young man to death in a love affair near Vatthalakundu.

You May Like