fbpx

#Breaking: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி வழங்கியது காவல்துறை…!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி வழங்கியது காவல்துறை.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கட்சியின் தலைவர் விஜய், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் வருகிற 23-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான அனுமதி வேண்டி, கடந்த 28-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அன்று மாலையே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தலைமையில் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இம்மாநாடு தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், 21 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அனைத்து கேள்விகளுக்கும் விஜய் கட்சி தரப்பில் இரந்து பதில் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாநாடு நடத்த தமிழக காவல்துறையான அனுமதி வழங்கியுள்ளது. மாநாட்டில் சுமார் 50,500 பேர் பங்கேற்க உள்ளதாக காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ள.

English Summary

The police gave permission to the conference of the Tamil Nadu Success Club.

Vignesh

Next Post

உயில் எழுதாத தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன?

Sun Sep 8 , 2024
If the father does not write a will, does the daughter have a right to the property? What does the law say?

You May Like