fbpx

’உங்களை அனுமதித்தால் என் வேலை போயிடும்மா’..!! தேர்வெழுத தாமதமாக வந்த மாணவியிடம் கெஞ்சிய போலீஸ்..!!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வை எழுத 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். மொத்தம் 2,763 மையங்களில் தேர்வு நடைபெற்றது. கோவையில் இந்த தேர்வை 113 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்குத் தேர்வு மையத்திற்கு வந்து விட வேண்டும் என்றும், காலை 9 மணிக்குப் பிறகு வருவோர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே மணிக்கூண்டு, தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையத்திற்கு மாணவி ஒருவர் 2 நிமிடங்கள் தாமதமாக வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், தேர்வெழுத தாமதமாக வந்ததால் உங்களை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

தாமதத்திற்கு மன்னித்து தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு மாணவி மன்றாடினார். ஆனால், வேறு வழியே தெரியாத அங்கு இருந்த போலீஸ் எஸ்.ஐ. ஒருவர், உங்களை அனுமதிக்க முடியாது. அனுமதித்தால் என் வேலையே போய்விடும் என்று கெஞ்சினார். அவரின் நிலைமையை உணர்ந்த மாணவி தேர்வு எழுத முடியாத சோகத்துடன் திரும்பிச் சென்றார்.

Read More : ’சார் என்னை விட்ருங்க’..!! வீட்டிற்கு செல்ல தயாரான செவிலியரை..!! குடிபோதையில் மருத்துவர்கள் செய்த அதிர்ச்சி செயல்..!!

English Summary

The police SI who was there who did not know otherwise. One cannot let you. He begged me that if I allow it, my job will go away.

Chella

Next Post

மின்சார ரயில் சேவைகள் நாளை முழுவதுமாக ரத்து..!! எந்த வழித்தடத்தில் தெரியுமா..? மாற்று ஏற்பாடு என்ன..?

Sat Sep 14 , 2024
Electric train services between Chennai Beach and Tambaram are completely cancelled.

You May Like