டெல்லி முதலமைச்சராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு இருந்தார். மதுபான முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறி சிபிஐ தரப்பிலும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ அதிகாரிகள் மீண்டும் கைது செய்தனா். இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, டெல்லியில் நேற்று (செப்.,15) கட்சி தொண்டர்கள் மத்தியில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசுகையில், நீதிமன்றத்தால் தற்போது ஜாமீன் பெற்றிருக்கும் நான் என்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என்றும் நான் குற்றமற்றவன் என்பதை மக்கள் நம்பி எனக்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெற செய்தால் மட்டுமே மீண்டும் முதல்வர் பதவியில் அமருவேன் என்று சூளுரைத்தார். அதோடு, 2 நாட்களில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என தெரிவித்தார். இதனால், முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் இன்று அல்லது நாளை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
டெல்லியின் அடுத்த முதல்வர் யார் ?
அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால், டெல்லியின் அடுத்த முதல்வராக, கெஜ்ரிவால் சிறையில் இருக்கும்போது பல்வேறு பொறுப்புகளையும் கவனித்து வந்த பெண் அமைச்சர் ஆதிஷி முதல்வராக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது அமைச்சர்களாக இருக்கும் கோபால் ராய், இம்ரான் ஹூசைன், கைலாஷ் கெலாட், சவுரப் ப்ரத்வாஜ் ஆகியோரில் ஒருவரை கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் அமரவைப்பார் என்று கூறப்படுகிறது.
Read more ; 2024இல் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்..!! வாழும் நாஸ்ட்ரடாமஸ் எச்சரிக்கை..!!