fbpx

”மதுவிலக்கு பற்றி பேசுவதால் திமுக கூட்டணியில் விரிசல் வந்தாலும் பரவாயில்லை”..!! திருமாவளவன் பரபரப்பு பேச்சு..!!

”தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற முழக்கத்துடன் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும்” என்ற திடீர் அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி சமீபத்தில் வெளியிட்டது. மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது.

திமுக கூட்டணியில் இருக்கும் போதே மதுவிலக்கு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நேரத்தில், ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என திருமாவளவன் பேசிய வீடியோ வெளியானது. அது அரசியல் வட்டாரத்தில் மேலும் பேசுப்பொருளானது.

இந்நிலையில், திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு’ குறித்த மண்டல சிறப்புச் செயற்குழு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “மதுவிலக்கு பற்றி பேசுவதால், கூட்டணியில் விரிசல் வந்தாலும் விசிக அதனை எதிர்கொள்ள தயார். அதிகாரத்தில் பங்கு குறித்து தான் பேசிய பதிவை திமுக மிரட்டியதால் நீக்கியதாக கூறுவதாகவும், விசிகவை மிரட்ட இங்கு யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை எனவும் ஆதங்கப்பட்டார். தற்போது திமுக கூட்டணியில் இருப்பதாகவே தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

Read More : பெரும் சோகம்..!! காமெடி நடிகர் கருணாகரனின் தந்தை காலமானார்..!! திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்..!!

English Summary

Even if there is a rift in the alliance, Vishika is ready to face it because he is talking about prohibition.

Chella

Next Post

Priyanka Vs Manimegalai | நீங்க பேசுறது டிஸ்டர்ப் ஆகுது.. உன்ன இந்த ஷோவ விட்டு அனுப்புறேன் டி..!! - CWC செட்டில் இருந்து லீக் ஆன ஆடியோ..

Mon Sep 16 , 2024
While Mani Mekalai has left Vijay TV's Cook with Komali show, the audio of Priyanka's fight with Mani Mekalai has been released.

You May Like