fbpx

கட்சி நிகழ்ச்சியில் பெண் நிர்வாகியிடம் எல்லைமீறிய அதிமுக வட்ட செயலாளர்..! அதிமுகாவில் கேள்விக்குறியாகும் பெண் பாதுகாப்பு..!

அதிமுகவின் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கிழக்குப்பகுதி 54வது வட்ட செயலாளராக 33 வயது மதிக்கத்தக்க நவீன் என்பவர் இருந்து வருகிறார். இவர் அதே கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி மீது கட்சி விழாவின் பொது தவறாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அந்த பெண் நிர்வாகி புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், அவர்கள் இருவரும் மேற்படிப்பிற்காக வெளியூரில் உள்ளனர், எனது கணவருக்கும் எனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் என் தாயுடன் தனியாக வசித்து வருகிறேன். நான் அதிமுகவில் முக்கிய நிர்வாக பொறுப்பில் இருப்பதன் காரணமாக கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன். அப்போது, மேலப்பாளையம் கிழக்குப்பகுதி வட்ட செயலாளர் நவீன் என்பவர் என்மீது பொது இடங்களில் தவறாக நடந்துகொண்டார்.

இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால், கட்சியில் அவரது செல்வாக்கை பயன்படுத்தி தொலைபேசி வாயிலாக என்னை மிரட்டி வருகிறார். இதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. மேலும் என் மீது பொது இடங்களில் அவதூறும் பரப்பி வருகிறார். அவரால் என் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து பெருமாள்புரம் போலீசார், அதிமுக மேலப்பாளையம் கிழக்குப்பகுதி வட்ட செயலாளர் நவீன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். அதிமுக கட்சிக்குள் இருக்கும் பெண் நிர்வாகிக்கு பாதுகாப்பு இல்லாதது, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Read More: மணிப்பூர் செல்ல நேரம் இல்லை.. கன்னுக்குட்டியுடன் வீடியோ எடுக்க உங்களுக்கு நேரம் கிடைக்கிறதா? – மோடியை சாடிய நடிகர் பிரகாஷ்ராஜ்

English Summary

AIADMK circle secretary transgressed to female executive at party function..! Questionable women’s safety in ADMUK..!

Kathir

Next Post

இந்த உணவை சாப்பிடுவதற்கு முன் கண்டிப்பா இந்த விஷயத்தை மறந்துறாதீங்க..!! விஷமா மாறிடும்..!!

Mon Sep 16 , 2024
Cantaloupe is nature's wonder vegetable for diabetics.

You May Like