fbpx

வெளிநாட்டுக்காரருடன் வாழ்க்கை நடத்திய ராதிகா..!! இப்போ மட்டும் கசக்குதா..? புட்டு வைத்த பயில்வான்..!!

நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருவதோடு நடிகர், நடிகைகள் பற்றிய பல கிசுகிசு தகவல்களை அவ்வபோது வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார். இவர் நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப் புள்ளியாக இருந்துள்ளார்.

மற்றவர்களின் விஷயங்கள் குறித்து தான் சொல்வது சரி தான் என்றும் எனக்கு எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் பயில்வான் இருந்து வருகிறார். ஆனால், அவர் கூறும் அனைத்துமே அவதூறுகள் தான் என்பது ரசிகர்களின் கருத்து. ஒரு சிலர் இவரை இப்படியே விடக்கூடாது என்று சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் நடிகைகளும் கூட வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான், சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ராதிகா குறித்த தகவலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”ராதிகா வெளிநாட்டுக்காரர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார். அவர் என்ன ஆனார் என்பதை கேட்க உரிமை இல்லை என்று ராதிகா சொல்லுகிறார். அந்த தகவலை சொல்ல வேண்டும் அல்லவா? ராதிகாவுக்கு வெளிநாட்டுக்காரருடன் கல்யாணம் நடந்தது உண்மைதான்.

ஆனால், ராதிகாவோ எங்களை பற்றி ஏன் பேசுகிறீர்கள்? என்று கேட்கிறார். ஏம்மா அதுதானே எங்களது தொழில். ஒரு காலத்தில் ராதிகா சிறந்த நடிகை. அழகாக தமிழ் பேசுகிறார் என்று நாங்களே எழுதியிருக்கிறோம். பசும்பொன் படத்தில் ராதிகா நடித்த போது அந்த மாதிரி கேரக்டரில் வேற எந்த நடிகைகளும் நடிக்க முடியாது என்றுக்கும் நடிக்க துணிவில்லை என்று நான் தான் சொன்னேன். அப்போது எல்லாம் இனித்ததா..? தற்போது உண்மையை சொன்னால் கசக்குதா..? என்று விளாசியுள்ளார் பயில்வான்.

Read More : ’கமல் படங்களில் நடிகைகளுக்கு இந்த நிலைமை தான்’..!! ’கண்டிப்பா அது இருக்கும்’..!! ’இதுக்குத்தான் நான் நடிக்கல’..!! ராதிகா பரபரப்பு தகவல்..!!

English Summary

Actor Ranganathan created a stir by revealing information about actress Radhika in an interview recently.

Chella

Next Post

நிபா வைரஸ்: தமிழகத்தில் தீவிர சோதனை..! மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டும்..!

Wed Sep 18 , 2024
Nipah virus: Intensive testing in Tamil Nadu..! Must wear mask again..!

You May Like