fbpx

ஆரம்பமாகின்றதா 3 ஆம் உலகப்போர்? லெபனான் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்..!! கொத்து கொத்தாக மடியும் மக்கள்..

லெபனானில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வெளி தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17-ம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் பலர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், இந்த நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் இன்று குண்டுமழை பொழிந்து வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் 300 இடங்களை குறித்து வைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் 12-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், தெற்கு லெபனான் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலில் படுகாயமடைந்த 300-க்கும் மேற்பட்டோர் வருவதாக லெபனான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்துவதற்கு சிறிது நேரம் முன்னதாக, இஸ்ரேலில் இருந்து அனைத்து லெபனான் போன் இணைப்புகளுக்கும் அழைப்பு வருகிறது. அதில், நீங்கள் இருக்கும் கட்டடம் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளது உடனடியாக கட்டடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறுகின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் 80 ஆயிரம் போன் அழைப்புகள் இஸ்ரேலில் இருந்து லெபனான் தலைநகரப் பகுதிக்கு வந்ததாக, அந்நாட்டு தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இத்தாக்குதலை நிறுத்த வேண்டும் என லெபனான் பிரதமர் நஜீப் மிகாதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பிற நாடுகளை கேட்டுகொண்டுள்ளார்.

Read more ; 2025 முதல் 5079 வரை.. மிரள வைக்கும் பாபா வங்காவின் பகீர் கணிப்புகள்..!!

English Summary

More than 100 people were killed in an Israeli airstrike in Lebanon today. More than 300 people were injured.

Next Post

இந்தியாவில் அச்சுறுத்தும் Mpox வைரஸ்..! பொது சுகாதார அவசரநிலையை அறிவித்தது WHO..!!

Mon Sep 23 , 2024
India reports first case of Mpox strain that forced WHO to declare public health emergency

You May Like