fbpx

சென்னையில் மர்ம காய்ச்சல்.. குழந்தைகளிடையே வேகமாக பரவல்.. அறிகுறிகள் இதுதான்..!!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தட்பவெப்பம் மாறுபாட்டால் காய்ச்சல் வருவது இயல்புதான் என்றாலும், அது ஒரே மாதிரியான பாக்டீரியா அல்லது வைரஸால் ஏற்படக்கூடிய காய்ச்சலாக இருக்கும். அந்த வகையில், தற்போது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மர்மக்காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது.

கடுமையான உடல் வலி, வறட்டு இருமல், நெஞ்சு சளி ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கின்றன. மேலும், குழந்தைகள் இந்த வகை காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கு அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, கண்வீக்கம், கண் வலி ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் சென்னையில் சாதாரண கிளினிக் முதல் பெரிய மருத்துவமனைகள் வரை நோயாளிகளால் நிரம்பி வழிந்து வருகின்றன. காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தடுப்பூசிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அறிகுறிகள் : சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தும்மல், மூக்கு அடைப்பு , தொண்டை புண், கண்களில் நீர் வடிதல், மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல், சுவை இழப்பு, வாசனை இழப்பு ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.

இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில்,  கடந்த சில தினங்களாக சென்னையில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் 30-40 சதவிகிம் பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் யாருக்கும் ஆக்சிஜன் லெவல் குறையவில்லை. செயற்கை சுவாசம் அளிக்கும் அளவிற்கு நிலை ஏற்படவில்லை. இந்த தொற்று குணமடைய நேரம் எடுக்கும் என தெரிவித்தார்.

நோயாளி குணமடைந்த பிறகும், அறிகுறிகள் சில நாட்களுக்கு காலத்திற்கு நீடிக்கும் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் இருமல், சளி மற்றும் குமட்டல் கேஸ்களுக்கு மத்தியில் கண்மூடித்தனமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அதாவது ஆண்டிபயாட்டிக்குகளை பயன்படுத்த கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Read more ; ரவுடி சம்போ செந்திலுக்கும் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை? குற்றப்பத்திரிக்கையில் ஷாக்..

English Summary

A mysterious fever has been spreading in Chennai and its suburbs for the past few days

Next Post

நாள் முழுவதும் உட்கார்ந்தே வேலை செய்கிறீகளா? உடற்பயிற்சி கட்டாயம்.. நிபுணர்கள் எச்சரிக்கை

Sat Oct 5 , 2024
Sitting for long hours a day is one of the key reasons responsible for obesity, heart disease, hypertension, and other severe health problems.

You May Like