ஆண்களை குறிவைத்துத் தாக்கும் புற்றுநோய்களில் புரோஸ்டேட் புற்றுநோயும் ஒன்று. பொதுவாக இது வயதானவர்களிடம் அதிகம் காணப்படும். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் இது பொதுவான நோயாக மாறிவிட்டது. இறப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இது குறிப்பாக புகைப்பிடித்தல் மூலமாக பரவுகிறது என்று கூறுகின்றனர். அந்தவகையில் ஆண்கள் இந்த நோயை எப்படி எதிர்கொள்வது, அதன் அறிகுறிகள் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள்:
- உடல் சோர்ந்து கீழ் வயிற்றில் வலி ஏற்பட்டு சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட நேரிடும்.
- வலியுடன் சிறுநீர் கழிக்கும்போது அதில் ரத்தம் அல்லது சீழ் கலந்து போகும்.
- ஆணுறுப்பில் திடீர் திடீரென எரிச்சலுடன் வலி வரும்.
- கண்களைச் சுற்றி கருவளையம் உருவாகும். கால்களில் வீக்கம் தோன்றும்.
- ஆணுறுப்பில் விறைப்புத்தன்மை அடைய இயலாமை அல்லது சிரமம் ஏற்படும்.
- மேற்கண்ட இந்த அறிகுறிகளில் ஏதேனும் நீங்கள் கவனித்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
வராமல் தடுக்க நாம் கடைப்பிடிக்க வேண்டியவை:
- ஒரு நாளைக்கு சுமார் 1.5 – 2 லிட்டர் அளவு மட்டுமே திரவ வடிவ உணவுகளை உட்கொள்ளவும். படுக்கைக்குச் சென்ற 2 மணி நேரத்திற்குள் பருகி விடுங்கள்.
- தினமும் 5 பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடர்த்தியான நிறங்களைக் கொண்ட ஆரோக்கியமான இயற்கை உணவுகளை உட்கொள்ளுங்கள்.
- வேல்லைரொட்டி, பாஸ்தா, உருளைக் கிழங்கு ஆகியவற்றை தவிர்த்துக் கொண்டு, முழு தானியங்களை உனாவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
- வாரத்திற்கு 4 நாட்கள் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- தினமும் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்.
Read more ; பிரதமர் மோடி – அதிபர் முய்சு சந்திப்பு!. இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.3,000 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்து!.