fbpx

அத்தனை பேருக்கும் தண்ணீர் கொடுக்க முடியாது.. 5 பேர் உயிரிழப்புக்கு ஒன்றிய அரசு தான் காரணம்..!! – அமைச்சர் சிவசங்கர்

15 லட்சம் பேர் கூடுவார்கள் என விமானப்படை தெரிவித்த நிலையில், இரயில்வே மற்றும் மெட்ரோ மூலம் ஒன்றிய அரசு என்ன‌ நடவடிக்கை எடுத்தது? 5 பேர் உயிரிழப்புக்கு ஒன்றிய அரசு தான் காரணம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ”சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்பதை எடப்பாடி பழனிசாமி மறந்துவிட்டார் போல. 2019-ம் ஆண்டு அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலையொட்டி சொத்து வரி திரும்ப பெறப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரியை உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்த போது அதற்கு சம்பந்தம் தெரிவித்தது அதிமுக அரசு தான்.

விமான சாகசங்கள் நிகழ்வை ஒன்றிய அரசு தான் நடத்தியது. வெயில் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக எடப்பாடி தெரிவிக்கிறார். அரசுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவிக்கின்றோம். மக்களை திசை திருப்புவதற்காக செய்யும் போராட்டங்களை எடப்பாடி நிறுத்தி கொள்ள வேண்டும்.

வெப்பநிலை காரணமாக வெப்ப பாதிப்பு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தது என்பது உண்மை. மெரினாவில் 15 லட்சம் பேர் கூடும் போது அனைவருக்கும் அரசே தண்ணீர் வழங்குவது என்பது சாத்தியம் அற்றது. 15 லட்சம் பேர் கூடும் போது ரயில்வே மற்றும் மெட்ரோ மூலம் என்ன‌ நடவடிக்கை எடுத்தது? நிகழ்ச்சியை நடத்திய விமானப்படை ஒன்றிய அரசினுடையது, ரயில்வே துறையும் ஒன்றிய அரசினுடையது. 15 லட்சம் பேர் கூடுவார்கள் என விமானப்படை தெரிவித்த நிலையில், மெட்ரோவும் ரயில்வேவும் அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து தரவில்லை. ஞாயிற்றுக்கிழமை வழக்கமான அளவிற்கே ரயில்கள் இயங்கின. ஒன்றிய அரசு கூடுதலாக ஏன் இயக்கவில்லை” எனக் கேள்வி எழுப்பினார்.

Read more ; பின்புற தலைவலி பிரச்சனையா? காரணம் இதுதான்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!!

English Summary

It is not possible to give water to 15 lakh people.. How is Tamil Nadu government responsible for the death of 5 people? – Minister Sivashankar

Next Post

கோயிலுக்கு செல்பவர்கள் இந்த பாவத்தை மட்டும் பண்ணிடாதீங்க..!! பக்தர்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Wed Oct 9 , 2024
When we go to the temple, they give us many things like flower, fruit, coconut, garland etc. as prasad. The things given like this should be bought with devotion only then and left, brought home and kept carelessly.

You May Like