fbpx

மேம்பாலத்தின் மீது நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க கூடாது..! காவல்துறை அதிரடி உத்தரவு

மேம்பாலத்தின் மீது நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க கூடாது என சென்னை போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும். இதன் காரணமாக, அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மீது வரிசையாக நிறுத்தி வைத்தனர். மேம்பாலத்தின் மீது கார்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, போக்குவரத்து காவல் துறையினர், ஒரு சில கார்களுக்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கார்களை அப்புறப்படுத்தாத நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அபராதம் விதிக்க கூடாது என சென்னை போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சென்னை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக வதந்தி பரவி வருகிறது. இது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை பெருநகர சென்னை போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மேம்பாலங்கள் மீது வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது

மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு மேலும் உதவ, சென்னை போக்குவரத்துக் போலீசார் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சவாலான வானிலையின் போது வாகனங்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அருகிலுள்ள வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறிய, குடிமக்களுக்கு எங்கள் காவல் கட்டுப்பாட்டு அறை உதவும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியே எங்களின் முதன்மையான முன்னுரிமைகள் மற்றும் தேவையான ஆதரவை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பொதுமக்கள் 044-23452362, 044-23452330 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

English Summary

The Chennai Transport Department has ordered not to impose fines on vehicles parked on the flyover.

Vignesh

Next Post

சந்திரயான்-3 வெற்றி!. உலக விண்வெளி விருதை பெற்றார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்!.

Tue Oct 15 , 2024
ISRO's Somanath Receives IAF World Space Award For Chandrayaan-3 Success

You May Like