fbpx

தீபாவளி பண்டிகை..!! தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்த அரசு..!! டிக்கெட் விலை அதிகமா..? அமைச்சர் விளக்கம்..!!

தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், ”தீபாவளியை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 5.80 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இது தவிர, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவுள்ளோம்.

வெளிப்படையான ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களுக்கு இயக்க கட்டணம் ரூ.51.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு பேருந்துகளில் என்ன கட்டணம் தருவார்களோ, அதே கட்டணத்தை தனியார் பேருந்துகளில் தரலாம். ‘அரசு ஏற்பாடு செய்தது’ என தனியார் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

மேலும், அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவதை சிஐடியு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ”மக்கள் நலன் குறித்து அவர்கள் சிந்திப்பது கிடையாது. பண்டிகைக்காக மாநிலத்தின் வேறு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்குவதால் ஒரு கி.மீ.க்கு ரூ.90 என இயக்க கட்டணம் அதிகரிக்கும். ஆனால், தனியார் பேருந்துகளுக்கு ரூ.51.25 மட்டுமே வழங்கப்படும். அரசியலுக்காக இவ்வாறு குற்றம்சாட்டுகின்றனர்” என்றார்.

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் 3 நாட்களுக்கு முன்பாகவே சொந்த ஊர்களுக்கு பயணிக்க வசதியாக 14,086 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அக்.28 முதல் 30ஆம் தேதி வரை சென்னையில் இருந்து வழக்கமாக இயங்கும் 6,276 பேருந்துகளுடன் கூடுதலாக, 4,900 சிறப்பு பேருந்துகள் என 11,176 பேருந்துகள் இயக்கப்படும். மற்ற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 14,086 பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Read More : கனமழை எதிரொலி..!! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!! ஆட்சியர்கள் அறிவிப்பு..!!

English Summary

Minister Sivashankar has given an interview about the government taking private buses and running them ahead of Diwali.

Chella

Next Post

இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு...; ஊர்காவல் படையில் சேர 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Tue Oct 22 , 2024
Persons above 18 years of age can apply to join the Home Guard

You May Like