fbpx

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்!. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம்!. பிசிசிஐ அதிரடி!

Ruturaj Gaikwad : ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 15 பேர் கொண்ட இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ருதுராஜ் ஜெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா-ஏ-ஆஸ்திரேலியா-ஏ அணிகளுக்கு இடையேயான முதல் தர 2 போட்டிகள் அக்டோபர் 31-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி நவம்பர் 03 வரை நடைபெறும். இது தவிர, தொடரின் இரண்டாவது போட்டி நவம்பர் 07 முதல் 10 வரை நடைபெறும். முதல் போட்டி மேக்கேயிலும், 2வது போட்டி மெல்போர்னிலும் நடக்கிறது. ஆஸ்திரேலியா-ஏ அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடிய பிறகு, இந்தியா-ஏ அணி நவம்பர் 15 முதல் பெர்த்தில் இந்திய சீனியர் ஆண்கள் அணிக்கு எதிராக மூன்று நாள் இன்ட்ரா-ஸ்க்வாட் ஆட்டத்தில் விளையாடுகிறது.

சமீபத்திய தொடர்களில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்களிடம் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இருப்பினும் உள்ளூர் தொடரில் தொடர்ந்து அசத்தி வரும் ருதுராஜ் 2024 ரஞ்சிக் கோப்பையில் சதமடித்தார். அதனால் இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருடைய தலைமையில் இஷான் கிசான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் தமிழ்நாட்டிலிருந்து சாய் சுதர்சன் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக ரஞ்சிக் கோப்பையில் சாய் சுதர்சன் டெல்லிக்கு எதிராக இரட்டை சதம் அடித்ததால் வாய்ப்பு பெற்றுள்ளார்.

அவர்களுடன் அபிமன்யு ஈஸ்வரன் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்திய வங்கதேச தொடரில் அசத்திய நித்திஷ் ரெட்டி மற்றும் படிக்கல் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். பந்துவீச்சில் கலில் அஹ்மத், முகேஷ் குமார், யாஸ் தயாள், நவ்திப் ஷைனி, ஆல் ரவுண்டராக அசத்தி வரும் தானுஷ் கோட்டியான் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், நித்திஷ் ரெட்டி, தேவ்தூத் படிக்கல், ரிக்கி புய், பாபா இந்திரஜித், இசான் கிசான், (கீப்பர்), அபிஷேக் போரல் (கீப்பர்), முகேஷ் குமார், கலீல் அகமது, யாஷ் தயாள், நவ்தீப் சைனி, மாணவ் சுதர், டானுஷ் கோட்டியான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Readmore: புற்றுநோயை தடுக்கிறதா பீர்?. ஜெர்மன் ஆய்வில் புதிய தகவல்!

English Summary

Australian Tour!. Rudraaj Gaekwad Appointed as Captain!. BCCI action!

Kokila

Next Post

இனி யாரும் கட்டிப்பிடிக்கக்கூடாது!. விமான நிலையத்தில் கட்டுப்பாடு விதிப்பு!. பயணிகள் அதிருப்தி!

Tue Oct 22 , 2024
Inhumane: New Zealand airport slammed over 3-minute time limit for farewell hugs

You May Like