fbpx

நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழக கொள்கை விளக்க மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்கு காலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதுவரை பல லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்திற்கு வந்துள்ளனர். மேலும் பலர் வந்துகொண்டிருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இந்த தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து கேள்விக்கு, செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம். விஜய் எனது நீண்ட கால நண்பர், என்னுடைய முதல் படத்தோட தயாரிப்பே அவரது படத்தில் இருந்து தான் ஆரம்பித்தேன், அவரது புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

Read More: விஜய் மாநாட்டில் வெடித்த சர்ச்சை..!! தண்ணீரை தூக்கி வீசுவதால் பரபரப்பு..!! கழிவறை தண்ணீரை குடிக்கும் அவலம்..!!

English Summary

Congratulations to friend Vijay- Vice President Udayanidhi Stalin..!

Kathir

Next Post

சற்று நேரத்தில் தொடங்கும் தவெக மாநாடு..!! 19 தீர்மானங்கள் நிறைவேற போகுது..!!

Sun Oct 27 , 2024
It is said that Vijay will speak in this conference with emphasis on education, agriculture and women's progress. It is said that 19 resolutions may be passed in Vijay's conference.

You May Like