fbpx

2026இல் விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா..? எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பதில்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வேண்டும் என்றும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்றும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாடு குறித்து பேசுகையில், “தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியும் மாநாடு நடத்துவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநாடு சகோதரர் விஜய் தலைமையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெற்றது. அவருடைய ரசிகர்கள் அவருக்கு துணையாக வந்து கலந்து கொண்டனர். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு.

இப்போது தான் அவர்கள் கட்சி ஆரம்பித்து முதல் மாநாடு நடத்தியுள்ளனர். இன்னும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அதற்குள் கூட்டணி பற்றி எதுவும் கூற முடியாது. தவெகவுடன் கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் தான் முடிவு செய்யப்படும். அவர் அதிமுக பற்றி விமர்சிக்கவில்லை என்றால் அதிமுக சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று அர்த்தம். ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கொள்கையை கூறுவர் அது அவரது சுதந்திரம்.

கொள்கை இல்லாத கட்சிகள் என்றால் அது திமுக கூட்டணிகள் தான். கொள்கை ரீதியில் கூட்டணி என்றால் எதற்காக தனித்தனி கட்சிக்கள்.? மொத்தமாக திமுகவுடன் சேர்த்துவிட வேண்டியது தானே. எம்.ஜி.ஆர். பெயரை சொல்லாமல் இங்கு எந்த கட்சியும் நடத்த முடியாது” என்று கூறினார்.

Read More : ”இதை அன்றே செய்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார்”..!! பரபரப்பை கிளப்பிய எஸ்.பி.வேலுமணி..!!

English Summary

2026 assembly elections are one and a half years away. By then nothing can be said about the alliance.

Chella

Next Post

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் விஜய்..!! தவெகவை நம்பி கூட்டணி கட்சிகள் வருவது கேள்விக்குறிதான்..!! திருமா அட்டாக்..!!

Tue Oct 29 , 2024
It cannot be said that it is a share in the ruling power which has not yet taken the first step.

You May Like