fbpx

“தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம்”..!! போராளிகளின் தியாகங்களை நினைவுக் கூர்ந்த விஜய்..!!

தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1. மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்.

தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம். தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : ”அம்மா வெளியே போனதும் நீ உள்ள வா”..!! +1 மாணவியுடன் கானா பாடகர் உல்லாசம்..!! போலீசில் பலாத்கார நாடகம் ஆடியது அம்பலம்..!!

English Summary

Vijay said that today we will remember the sacrifices of the border fighters who fought to merge the Tamil areas with Tamil Nadu.

Chella

Next Post

ரயில் கழிவறையில் தண்ணீர் வரவில்லை.. பயணிக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!!

Fri Nov 1 , 2024
Consumer Commission has directed the South Central Railway to pay Rs 25,000 compensation to a passenger and his family due to poor toilet facilities on the Tirumala Express train.

You May Like