அசிடிட்டியை தவிர்க்க தினமும் எழுந்ததும் வாழைப்பழத்தை சாப்பிடுவது சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகிறது. இதன் அறிகுறியாக வயிற்றுப் பிடிப்புகள், சிலருக்கு நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்றவை உண்டாகிறது. வாழைப்பழம் அமிலத்தன்மை அதிகமாக இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு என அவர் தெரிவிக்கிறார். இது அமிலத்தன்மை குறைவாக உள்ள பழம் என்பதால் அசிடிட்டி உள்ளவர்களுக்கு ஏற்றது.
குடல் ஆரோக்கியம்: ஆற்றல் அதிகரிக்கக்கூடிய தன்மை இந்த பழத்துக்கு உண்டு,. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும். நமக்கு தேவையான நார்ச்சத்துக்கள் கிடைத்துவிடுவதால், மலச்சிக்கல் தீர்கிறது.. குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. மன அழுத்தத்தை விரட்டி நிம்மதியான தூக்கத்தை தரக்கூடியது இந்த வாழைப்பழம். எலும்பு ஆரோக்கியத்துக்கும், ஹார்மோன் உற்பத்தியிலும், இந்த பழங்களின் பங்கு அபாரமானவை. அதேசமயம், அதிக வாழைப்பழங்கள் சாப்பிடுவது ஊட்டச்சத்து குறைபாடை உண்டு செய்யலாம். குறிப்பாக, புரதம், கொழுப்பு, கால்சியம், வைட்டமின் D, இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் குறையலாம்.
வாயு பிரச்சனை : வாழைப்பழத்திலுள்ள நார்ச்சத்துகள், வாயு பிரச்சனை மற்றும் வயிறு வீக்கத்தை தந்துவிடும்.. இதிலுள்ள அளவுக்கதிகமான மாவுச்சத்து, செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்து கொள்ளும்.. வாழைப்பழத்தில் விட்டமின் B6 நிறைய உள்ளதால், நரம்புகளையும் பாதிக்கக்கூடும். ஏனவே தான், அதிக வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்பார்கள்.
பூவம், ரஸ்தாளி, மாலை, கற்பூரவாழை, செவ்வாழை போன்ற வாழைப்பழங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் குடலை எளிதில் சுத்தப்படுத்தும்.. பூவன் வாழை நல்ல ஜீரண சக்தியை தந்து ரத்தத்தையும் விருத்தி செய்யக்கூடியது. தசை ஆரோக்கியத்துக்கும் நல்லது.
மலச்சிக்கலுக்கு தீர்வு : வாழைப்பழம் உண்பதால் மலச்சிக்கல் குணமாகிறது. காலையில் ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு வாழைப்பழம் உண்ணுங்கள். வாழைப்பழம் பிடிக்காது என்றால் அதற்கு பதிலாக கருப்பு திராட்சை அல்லது பாதாம் சாப்பிடலாம் என ருஜுதா திவேகர் ஆலோசனை வழங்குகிறார்.
உடல் எடையை குறைக்கும் : நார்ச்சத்து அதிகம் இருக்கும் வாழைப்பழத்தை உண்பதால் நீண்ட நேரம் பசி தாங்க முடியும். ஆகவே உடல் பருமன், அதிக எடையை கட்டுப்படுத்தலாம். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் பொட்டாசியம் இதில் அதிகம் காணப்படுகிறது. அதனால் தினமும் சாப்பிடலாம்.
அசிடிட்டி : அசிடிட்டி ஏற்படாமல் தடுக்க அதிகாலையில் வாழைப்பழம் உண்பது ஏற்றது என ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். வாழைப்பழம் அமிலத்தன்மை அதிகமாக இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு என அவர் தெரிவிக்கிறார். இது அமிலத்தன்மை குறைவாக உள்ள பழம் என்பதால் அசிடிட்டி உள்ளவர்களுக்கு ஏற்றது.
Read more ; எச்சரிக்கை!!! பெற்றோரின் கவனக்குறைவால் துடிதுடித்து உயிரிழந்த குழந்தைகள்..