கடந்த வாரம் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாணர்களுக்கான போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி அரசு ஊழியார்கள் குறித்தும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பூதாகரமாக வெடித்தது. இதனால் மறுநாளே செய்தியாளர்களை சந்தித்து தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் கொடுத்தார். இருப்பினும் இந்த விவகாரம் அவருக்கு சிக்கலாக மாறியதால், இறுதியில் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்தார்.
தெலுங்கர்கள் பற்றி அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சம்மன் வழங்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு எழும்பூர் போலீசார் சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டுப்போட்டு பூட்டப்பட்டு இருந்தது. நடிகை கஸ்தூரி வீட்டில் இல்லை. இதையடுத்து அவரது செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்மனை வீட்டில் சுற்றினர்.
மேலும் நடிகை கஸ்தூரி போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து தலைமைவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை எழும்பூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே அவரின் போன் ஸ்விட் ஆப் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; விரைவில் OTT ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு புதிய விதிமுறைகள்…! மத்திய அரசு ஆலோசனை