fbpx

உங்கள் வீட்டில் இருக்கும் மிதியடியை சுலபமாக துவைக்க வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள்..

பொதுவாக நாம், வீட்டில் இருக்கும் அத்தனை பொருள்களையும் துடைத்து, துடைத்து சுத்தமாக வைத்திருப்போம். வீடே பளபளப்பாக இருக்கும். ஆனால், நம்மில் பலர் வீட்டில் இருக்கும் மிதியடியை சுத்தம் செய்ய மறந்து விடுகிறோம். அதற்க்கு பதில், சுவற்றில் தட்டி தூசியை மற்றும் அகற்றி விடுகிறோம். ஆனால், ஒரு வீட்டை பொறுத்தவரை பலரின் கால்கள் பட்டு அதிக அழுக்கு இருக்கும் ஒரே பொருள் அது மிதியடியாக தான் இருக்கும். அதை நாம் இப்படி சுத்தம் செய்யவில்லை என்றால் அதில் உள்ள கிருமிகள் வீடு முழுவதும் பரவும். இதனால் நீங்கள் வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது, உங்கள் வீட்டில் இருக்கும் மிதியடியை கண்டிப்பாக துவைக்க வேண்டும்.

பலர் மிதியடியை துவைக்காமல் வைத்திருக்க காரணம். மிதியடியை துவைப்பது மிகவும் கடினம். பிரஷ் போட்டு அழுக்கு போகும் வரை துவைப்பதர்க்குள் ஓய்ந்து விடுவோம். ஆனால் இனி நீங்கள் இப்படி கஷ்டப்பட்டு மிதியடியை துவைக்க வேண்டாம். எந்த கஷ்டமும் இல்லாமல் 10 நிமிடத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் மிதியடியை சுத்தமாக துவைத்து விடலாம். எந்தவித அழுக்கும் கறைகளும் இல்லாமல் மிதியடியை எப்படி துவைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

இதற்கு முதலில், ஒரு அகலமான வாளியில் சூடான தண்ணீரை ஊற்றி,  அதில் உங்கள் வீட்டில் இருக்கும் மிதியடியை மூழ்குமாறு ஊற வைத்து விடுங்கள். அரை மணி நேரத்திற்கு பிறகு, மிதியடியை எடுத்து சாதாரண தண்ணீரில் நன்கு அலசி விடுங்கள். இதனால், மிதியடியில் இருக்கும் பாதி அழுக்குகள் நீங்கிவிடும். பின்னர், அதே வாளியில் மீண்டும் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் 2 ஸ்பூன் டிடர்ஜென்ட் பவுடர், வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை சேர்த்து விடுங்கள்.

இந்த கலவையில், மூன்று முடி டெட்டால் ஊற்றி, நன்கு கலந்து விடுங்கள். இப்போது, இந்த தண்ணீரில் மிதியடியை சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். ஒரு மணி நேரத்திற்கு பின், மிதியடியை  சாதாரண தண்ணீரில் நன்கு அலசி வெயிலில் காய வைக்க வேண்டும். இப்படி செய்தால், உங்கள் மிதியடியை நீங்கள் சுலபமாக சுத்தம் செய்து விடலாம்.

Read more: தினமும் 5 காளான் போதும்.. புற்று நோய் முதல் இதய நோய் வரை வராமல் தடுக்க முடியும்…

English Summary

easy ways to clean floor mat

Next Post

வெளுத்து வாங்கும் மழை... மேலும் இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..! முழு விவரம் இதோ

Thu Dec 12 , 2024
Heavy rain... Two more district schools are closed.

You May Like