fbpx

பிக்பாஸ் எலிமினேஷன்… மீண்டும் ஒரு பெண் போட்டியாளருக்கு டாட்டா காட்டும் பிக்பாஸ்..!! அப்போ சாச்சனா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. முதன்முறையாக கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் அலப்பறையாக தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா மற்றும் சுனிதா ஆகிய 4 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் மந்தமாக சென்று கொண்டு இருப்பதால், ஆட்டம் சூடுபிடிக்க தீபாவளி பண்டிகையை ஒட்டி வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்படி ராணவ், ரயான், ரியா, வர்ஷினி வெங்கட், மஞ்சரி, ஷிவக்குமார் ஆகிய 6 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே சென்றனர். இவர்கள் வந்த பிறகாவது ஆட்டம் களைகட்டும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் இந்த வார எலிமினேஷனுக்கான வார இறுதி இன்று வந்துவிட்டது. விஜய் சேதுபதி இந்த வாரம் நடந்த சர்ச்சைகளில் எதைப்பற்றி பேச போகிறார் யாரை காவு வாங்க போகிறார் என பல கேள்விகள் ரசிகர்களிடம் இருக்கிறது. இந்த நிலையில் இன்று எலிமினேஷன் ஆகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த போட்டியாளரான ரியா தியாகராஜன் தான் இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வந்த ரியா அங்கும் விமர்சகர் போன்றே நடந்து கொள்வதாக புகார் எழுந்தது. இதற்கிடையே சிலரோ இது அநியாயம் என புலம்பி வருகிறார்கள். முன்னதாக பிக் பாஸ் 8 நிகழ்ச்சி துவங்கியபோது கலந்து கொண்டவர் விமர்சகர் ரவீந்தர் சந்திரசேகரன். பிக் பாஸ் விமர்சகரான அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்டார். விமர்சகர் ரியாவோ இரண்டு வாரத்தில் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

Read more ; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த நகர்வு.. சிக்குகிறாரா சம்போ செந்தில்?

English Summary

In the 8th season of Bigg Boss, the wild card contestant who came with the intention of becoming the title winner has been eliminated and sent home.

Next Post

கல்யாண வீடியோவை வித்து பணம் சம்பாதிக்கனுமா? நயன்தாரா-தனுஷ் விவகாரம் குறித்து மேடையில் விளாசிய காயத்ரி ரகுராம்..!!

Sun Nov 17 , 2024
Can you make money by seeding a wedding video? Gayatri Raghuram blasted on stage about Nayanthara-Dhanush issue..!!

You May Like